இந்த வருஷம் ஆனித் திருமஞ்சனம் ஜூலை மாதம் ஏழாம் தேதி கொண்டாடப் பட்டது.
ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு வருஷத்தில் ஆறு முறை அபிஷேகம் நடைபெறுகிறது.
1 ) சித்திரை மாதத்தில் திருவோண நக்ஷத்ரம்
2 ) ஆனி மாதம் உத்திர நக்ஷத்ரம்
3 ) ஆவணி மாதத்தில் பூர்வ பக்ஷ சதுர்த்தசி
4 ) புரட்டாசி மாதம் பூர்வ பக்ஷ சதுர்த்தசி
5 ) மார்கழி மாதம் திருவாதிரை
6 ) மாசி மாதம் பூர்வ பக்ஷ சதுர்த்தசி
Natarajar Abhishekam
ஆனித் திருமஞ்சனம் , திருவாதிரை நாட்களில் கூத்தப்பிரான் பக்தர்களுக்குத் தரிசனம்
கொடுப்பதாக ஐதீகம். ஆனி உத்திர நாளில் தான் குருந்த மரத்தின் கீழ் அமர்ந்து சிவபெருமான்
மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்தார் என்று கூறப்படுகிறது.
நடராஜப் பெருமானின் திருவுருவம் சிருஷ்டி . ஸ்திதி, சம்ஹாரம் , திரோதானம் , அனுக்கிரகம்
ஆகிய பஞ்ச கிருத்தியங்களை ( அதாவது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
ஆகிய ஐந்தொழில்கள் ) விளக்குகிறது என்று சொல்வார்கள்.
நடராஜப் பெருமானின் சிறப்பான ஐந்து சபைகள்:
1 ) கனகசபை ( சிதம்பரம் ), 2 ) வெள்ளியம்பலம் ( மதுரை ) , 3 ) ரத்னசபை ( திருவாலங்காடு )
4 ) தாமிரசபை ( திருநெல்வேலி ) , 5 ) சித்திரசபை ( திருக்குற்றாலம் ).
Chidambaram Natarajar Temple
Tiruvaalangaadu Temple
Peraiyur Natarajar Temple
Vasakar Temple
Kutralam Chitrasabhai