விசேடமூர்த்தி-ஸ்ரீசுவேதவிநாயகர் (வெள்ளை விநாயகர்) கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் தஞ்சாவூர் செல்லும் பாதையில் இத்தலம் உள்ளது. சோழப்பெருவேந்தரின் தலைநகரமாம் பழையாறைக்கு மிக அருகில் அமைந்துள்ளஸ்தலம். சோழர் காலத்திலிருந்தே நகரச்சூழ்நிலையிலிருந்து விலகி சிற்றூராகவே காட்சியளிக்கும் இத்தலம் இயற்கை எழில் கொஞ்சும் இறைsயருள் ஸ்தலமாகத் திகழ்கிறது.
வெள்ளை விநாயகர்
திருவலஞ்சுழியின் மிகச்சிறந்த பிரசித்தமாய் விளங்குகிறார் ஸ்ரீ சுவேத விநாயகர். சுயம்புவாய் அமைந்த சிவேத விநாயகர் தேவேந்திரனால் கடல்நுரையால் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையார் ஆனதால் வெண்மையாய் இருக்கிறார். இவ்வெள்ளை விநாயகருக்கு அபிஷேகம் கிடையாது? அதற்குபதில் பச்சைக்கற்பூரம் சார்த்துவர். சிவத்தலங்களிலேயே விநாயகருக்குறிய க்ஷேத்ரமாக திருவலஞ்சுழி கூறப்படுகிறது.
வலம்சுழித்த காவேரி
காவிரித்தாய் இத்தலம் வந்தவுடன் இறைவனை வளமாகச் சுற்றி வந்து அதன் மேல் செல்லாமல் ஆதிசேஷன் வெளிபட்ட பாதாளம் ஒன்றினுள் புகுந்துவிட்டாள். இதையறிந்த மன்னன் திகைத்தான். செய்வதறியாது இறைவனை வேண்ட அசரீரி ஒலித்தது. முற்றம் துறந்த முனிவரொருவர் பாதாளத்துள் குதித்து தம்மை பலியிட்டுக் கொண்டால் காவேரி வெளிப்படும். இதுகேட்ட மன்னன் அவ்வாறு முன் வருவார் எவரோ? என கலங்கி நின்றான் அப்போது குணமுடைய நல்லடியார் வாழ் கொண்டையூரிற் என்ற திருதாண்டகத்தின் படி அருகில் அமைந்துள்ள ஊரான திருக்கொண்டையூர் தவம் பிரிந்த ஏரண்ட முனிவர் அதனையறிந்தார்.
தம்மையே தியாகம் செய்ய முன்வந்தார். பாதாளத்தினுள் இறங்கினார். அடுத்த கணம் காவேரி வலஞ்சுழிந்து மேலே வந்தாள். இதன் காரணமாகவே இத்தலம் திருவலஞ்சுழி என்றானது. நாம் அவசியம் வணங்க வேண்டிய இக்கோயிலில் ஏராண்ட முனிவர் சிலை வடிவத்தில் காட்சியளிக்கிறார். வெள்ளை விநாயகர் நமது மனதையும் வெள்ளையாக்கி மனத்துன்பம் போக்கி தூயரத்தை அளிக்க வணங்குவோம்.