இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், பழம்புற்றுநாதர்.
இறைவியார் திருப்பெயர் : பாகம்பிரியாள்.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : வாசுகி.
வழிபட்டோர் : மகாவிஷ்ணு, வாசுகி.
வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - மனவஞ்சர் மற்றோட, அப்பர் - உஞ்சேனை மாகாளம், சுந்தரர் - மூல னூர்முத லாயமுக்
தல வரலாறு
'கல்லல்' என்ற ஊருக்குப் பக்கத்தில் 'வெற்றியூர்' என்றொரு ஊர் இருப்பதால், இத்தலத்தை "திருவெற்றியூர்" என்றே அழைக்கின்றனர்.
இத்தலத்திற்கு 'ஜயபுரி' என்றும் பெயருண்டு.
மகாவிஷ்ணு தனக்கு ஏற்பட்ட புற்று நோயைத் இத்தல இறைவனை வழிபட்டு, சிவபுஷ்கரணியான வாசுகி தீர்த்தத்தில் நீராடி நீங்கப் பெற்ற தலம்.
சிறப்புக்கள்
இத்தலம் சம்பந்தர், அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
"பாகம் பிரியாள் கோயில்" என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும்; அவ்வளவு பிரசித்தியான கோயில்.
சிறந்த பிரார்த்தனைத் தலமாதலின் எப்போதும் மக்கள் வெள்ளம் வந்து சென்ற வண்ணமுள்ளது.
கோயிலின் பிரதான (கிழக்கு) வாயிலின் முன்பு பெரிய தீர்த்தக் குளமுள்ளது.
தட்சிணாமூர்த்தியிடத்தில் உபதேசம் பெறும் நான்கு முனிவர்களின் திருவுருவங்களும் தனித்தனி மூர்த்தங்களாகப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மாவிளக்கு பிரார்த்தனை செய்பவர்கள் கோயிலிலேயே மாவை இடித்துக்கொள்ளும் பொருட்டு, பிராகாரத்திலேயே நிறைய கல் உரல்கள் ஆங்காங்கே உள்ளன.
இக்கோயிலில் யாரேனும் திருடினால், கட்டாயம் இறைவனால் உடனேயே ஏதேனும் தண்டனை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து 'தொண்டி' செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்றதும், "திருவெற்றியூர் 10 கி. மீ." என்று கைகாட்டி உள்ள இடத்தில், வலப்புறமாகப் பிரியும் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். நல்ல தார்ச்சாலை. தொண்டியிலிருந்து 9 கி. மீ. தொலைவு.