கடலை பருப்பு - 1 கப்; துவரம் பருப்பு - 1/2 கப்; உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்; புதினா - 1 கட்டு; பச்சை மிளகாய் - 3 ; சோம்பு - 1 /2 டீஸ்பூன்; இஞ்சி - 1 துண்டு; பட்டை; கிராம்பு - 2 ; உப்பு - தேவைகேற்ப; எண்ணெய் - பொரிக்க

மூன்று பருப்புகளையும் 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் நீரை நன்றாக வடிகட்டி மிக்ஸ்யில் அரைக்கவும். அதோடு இஞ்சி, சோம்பு மிளகாய், உப்பு, பட்டை, மற்றும் கிராம்பு சேர்த்து அரைக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய புதினாவை மாவுடன் கலந்து வடை தட்டி சூடான எண்ணையில் பொரிக்கவும். இதனுடன் சட்னி அல்லது சாஸ் பரிமாறவும்.

குடமிளகாய் ஊத்தப்பம் குடமிளகாய் - 2 ; தக்காளி - 1 ; வெங்காயம் - 1 ; கறிவேப்பிலை, கொத்தமல்லி; மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்; கடுகு; உப்பு; தோசை மாவு

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்; பிறகு கறிவேப்பிலை, வேங்கையும் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்; நிறம் மாறியவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, குடமிளகாய், மிளகாய் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா போட்டு வதக்கவும். தக்காளி மற்றும் குடமிளகாய் நன்றாக வெந்து நிறம் மாறியவுடன் கொத்தமல்லி போட்டு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். பிறகு தோசை கல்லில் மெலிதாக தோசை வார்த்து அதன் மேல் இந்த குடமிளகாய் கறியை தூவவும். தோசை நன்றாக வெந்தவுடன் மெதுவாக கல்லில் இருந்து எடுத்து பரிமாறவும்.