கடந்த இருபத்தி நான்கு ஆண்டுகளாக இந்திய கலாச்சாரத்தை லண்டனில் பேணி வளர்த்து வரும் சவுத் இந்தியன் சொசைட்டி(SIS), இந்த ஆண்டு கடந்த 29 ஆம் தேதி சனிக்கிழமை, தீபாவளி நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் பங்கு பெற்று தங்கள் கலைத் திறனைக்கட்டி அசத்தினர்.
சென்ற ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை போலவே இம்முறையும் உறுப்பினர்கள் அனைவரையும் தீபாவளி லேகியத்துடன் வரவேற்று அசத்தினர் எஸ் ஐ எஸ் குழுவினர். சிறுவன் ஹ்ரிஷிகேஷ் அஜித்தின் மழலைக்குரலில் கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் இனிதே துவங்கியது. தொடர்ந்து மூன்று வயது குழந்தை முதல் அறுபது வயது பேரிளம் குமரன்/குமரி வரை பங்குபெற்று தங்கள் கலைத்திறனை வெளிபடிதினர்.
செவிக்கும் விழிக்கும் இனிய விருந்தளிக்கும் வண்ணம் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அமைந்திருந்தது இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் தனிச்சிறப்பு. திருமதி பூர்ணிமா சந்திரசேகர் மற்றும் திருமதி சுஜாதா சந்தோஷ் குழந்தைகளை வைத்து நடத்திய பேஷன் ஷோ பார்வையாளர்களிடம் பலத்த வரவேற்பு பெற்றது. திருமதி சத்யாவின் நடன அமைப்பில் குழந்தைகள் பல மொழி பாடல்களுக்கு அழகாக ஆடி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து மகிழ்தினர். இதனைத்தொடர்ந்து சிறுவர்களது இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. A12 இளம் பெண்கள் ஆடிய ஆட்டமும், இன்னிசை நிகழ்ச்சியும், விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்தது. திருமதி வினிதா ஹரிஷின் "திரையில் பரதம்" நாட்டிய நிகழ்ச்சி பார்வையாளைகளை அந்தந்த காலகட்டத்து சினிமாவிற்கே கூட்டி சென்றது போலிருந்தந்து. Dr.சந்திரசேகரன் இயக்கிய "அந்த நாள் ஞாபகம்" நடன நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமாகவும், நகைச்சுவையாகவும், அனைவரையும் கவரும் வண்ணமாகவும் இருந்தது. விழாவின் முக்கிய அம்சமாக செல்வி நந்தினி முத்துசுவாமியின் வயலின் கச்சேரி அமைந்து அன்றைய தினம் அரங்கிற்கு மகுடம் சுட்டியது போல் அமைந்தது. நம் நாட்டு கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மறக்காமல் வெளிநாடு சென்றாலும் தம் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் பெற்றோர்களுக்கு தனி பாராட்டுக்கள்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் திருமதி. மைதிலி வெங்கட் ரசிக்கத்தக்க வகையில் அற்புதமாக தொகுத்து வழங்கினர். கடவாசல் கார்த்திக் நன்றியுறை கூறி நிகழ்சிகளை இனிதே நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து விழாவிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கியதுடன் அறுசுவை உணவு படைத்தது அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினர் எஸ் ஐ எஸ் குழுவினர்கள்.
|
SIS Deepavali - Oct 2011 |